பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை முன்னிட்டு சில அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் பஸில் கையடிப்பாரெனவும், இதனால் சுயாதீனமாக இயங்கமுடியாத நிலை எற்படும் எனவும் அவர்கள் தமக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இது தொடர்பில் எடுத்துரைத்து , சுயாதீனமாக இயங்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இவர்கள் தற்போது கவனம் செலுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பஸில் ராஜபக்ச தற்போது சுயதனிமையில் உள்ளார். தனிமைப்படுத்தல் காலம் ஜுலை 07 ஆம் திகதி நிறைவுக்குவருகின்றது. அதன்பின்னர் அவர் நாடாளுன்றம் வரவுள்ளார்.
ஜுலை மாதத்துக்குள் பொருளாதார விவகார மற்றும் நிதி இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்கவுள்ளார். முதலீட்டுச்சபை, துறைமுக நகரம் உட்பட முக்கிய திணைக்களங்கள் பஸில் வசம் கொண்டுவரப்படவுள்ளன.
அதேவேளை, பஸிலின் மீள் வருகை தொடர்பில் அமைச்சர்களான விமல், வாசு, கம்மன்பில போன்றவர்களும் அதிருப்தி நிலையிலேயே உள்ளனர். இந்நிலையில் விமலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ள பஸில், ஏனைய இருவரையும் விரைவில் சந்திக்கவுள்ளார்.










