‘பஸில் வந்தால் கப்பலுக்கு நேர்ந்த கதியே பொருளாதாரத்துக்கும் ஏற்படும்’

” பஸில் ராஜபக்ச பொருளாதார விவகார அமைச்சராக பதவியேற்றால், ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலுக்கு நேர்ந்த கதியே இலங்கையின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

பஸில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சேற்றுக்குழிக்குள் விழுந்தவர்கள் துள்ளக்கூடாது. அவ்வாறு துள்ளினால் முழுமையாக சேற்றில் மூழ்கவேண்டிய நிலையே ஏற்படும். இலங்கை கடற்பரப்புக்குள் வைத்து எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து அனர்த்தத்துக்குள்ளானபோது, கப்பற்றுறை அமைச்சரும், துறைமுக அதிகாரச்சபையினரும் கதையளந்தனர். இறுதிகட்டத்தில்தான் கப்பல் இழுக்க முற்பட்டனர். அப்போது என்ன நடந்தது, கப்பல் உடைந்து கடலுக்குள் மூழ்கியது.

பஸில் ராஜபக்ச என்பவரும் அவ்வாறுதான், இலங்கை எனும் கப்பலும், பொருளாதாரமும் தீப்பிடித்து எரிந்துள்ளது. எனவே, இவற்றை இழுப்பதற்கான பொறுப்பை பஸிலிடம் கொடுத்தால் இவையும் மூழ்கிவிடும். கடைசியில் கப்பலுக்கு நேர்ந்த கதிதான் எமது நாட்டுக்கும் நேரும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles