பஸ் கட்டணம்! இதுவொரு நல்ல செய்தியல்ல : ஆனால் சொல்லியாக வேண்டும்

தற்போதைய நிலையில் போக்குவரத்து துறையின் அனைத்து செலவுகளையும் கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

டயர், பட்டரி, எரிப்பொருள், ஒயில், மேலதிக பாகங்கள் மற்றும் சேவை கட்டணங்கள் வேகமாக உயர்வதால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டுள்ளது. தங்கள் கோரிக்கை நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச பஸ் கட்டணமான 14 ரூபாவை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles