இபோச பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தி பலவந்தமாக வெளியேற்றிய நடத்துனருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர், அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்தார்.
” எடுக்கப்படும் நடவடிக்கை தற்காலிகமானதாக இருக்ககூடாது, அது நிரந்தர நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் தற்காலிக நடவடிக்கையென் கூறிவிட்டு அவரை மீண்டும் சேவைக்கு கொண்டுவந்துவிடுவார்கள்.” எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
அதேவேளை, குறித்த நடத்துனருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பமாகியுள்ளது. அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மன்னிப்பு கோருகின்றோம் என போக்குவரத்து அமைச்சர் இதற்கு பதிலளித்தார்.
