பஸ் விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயம்!

மொனராகலையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles