பாகிஸ்தானில் மீண்டும் கொடூரம்

பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு இளம்பெண் உட்பட 4 பெண்கள், சந்தையில் உள்ள திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் ஓரு கும்பல் அவர்களை பிடித்து கடுமையாக அடித்து உதைத்தனர்.

ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தினர். அப்போது, ஆடைகளை தரும்படி பெண்கள் கதறிய போதும், அந்த கும்பல் அதனை கண்டு கொள்ளாமல் தடியினால் கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் தங்களை விட்டு விடும்படி அந்த பெண்கள் கதறிய போதும், கும்பலின் காதுகளில் விழவில்லை. மக்கள் நடமாட்டமுள்ள அந்த சந்தையில், ஒருவரும் பெண்களுக்கு உதவ முன்வரவில்லை.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பெண்கள் வீதியில் நிர்வாணமாக கிடந்தனர். இந்த சம்பவத்தை படம் பிடித்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது அதிகம் பரவ தொடங்கியதால், பொலிஸாரின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து முக்கிய குற்றவாளிகள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கையில், அந்த சந்தையில் கழிவுகளை சேகரிக்க சென்றோம். தாகம் எடுத்ததால், அருகில் இருந்த மின்சார பொருட்கள் கடைக்கு சென்று தண்ணீர் கேட்ட போது, கடை உரிமையாளர் சதாம் உட்பட சிலர் நாங்கள் திருட வந்ததாக குற்றஞ்சாட்டி, தாக்கினர். எங்களது ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். அங்கிருந்த ஒருவரும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

முக்கிய குற்றவாளி சதாம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த பொலிஸார், இன்னும் சிலரை தேடி வருகின்றனர். பெண்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Latest Articles