பொருளாதார வீழ்ச்சி, அந்நிய செலாவணி கையிருப்பின்மை போன்ற சில சிக்கல்களுக்கு முகம் கொடுத்துவரும் பாகிஸ்தானை CAA 1 தரத்தில் இருந்து CAA 3 தரத்துக்கு சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரமிறக்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெறும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் ஒரு நிலையில் இத் தரமிறக்கம் பாக். ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும் என இந்திய பொருளாதார அவதானிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலை மற்றும் பணப் புழக்கமின்மை என்பன அதன் கடன்களை திருப்பிச் செலுத்தும் தன்மையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அனுமானிக்கப்பட்டதையடுத்தே மூடீஸ் இத் தரமிறக்கலை செய்திருக்க வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.
இதே சமயம் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைக்கு அமைவாக புதிய வரி விதிப்புகளை பாக். அரசு மேற்கொண்டு வந்தாலும் உடனடி மாற்றங்களை அவை ஏற்படுத்தாது என்று சுட்டிக் காட்டப்படுகிறது.










