சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபராமாக பலியாகியுள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மில்லகாமுல – கித்துல்வத்த எனும் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி தோட்டப்பகுதியில் இருந்த பாக்கு மரத்தில், பாக்கு பறிப்பதற்கு சென்ற 42 வயதுடைய நபரொருவரே, இவ்வாறு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார்.
மிருக வேட்டைக்காக குறித்த மின்வேலி போடப்பட்டிருக்கலாம் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
