கிரிபத்கொட, போபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் வைத்து கஞ்சா கலந்த 500 போதைப்பொருள் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிரிபத்கொட பொலிஸாரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த கஞ்சா கலந்த குறித்த புகையிலை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.