அரசாங்க பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை திறைசேரி இனி ஏற்காது எனவும், அதனை பாடசாலைகளினூடாகவே செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் நீர்க்கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல் குடிநீர் கட்டணத்திற்கு அரசு நிதி வழங்காது என அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனால், பாடசாலை குடிநீர் கட்டணத்தை பெற்றோர் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் வாசு தேவ நாணயக்காரவுடன் பேசிய போது, தனக்கு அது பற்றி தெரியாது என அவர் அறிவித்துள்ளார்.
எனவே இந்த முடிவை மாற்றுமாறு கல்வி அமைச்சை கோருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்’










