வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் ஆளுநர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக செயற்படும் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்துக்கு மாற்றப்படவுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநராக தற்போது செயற்படும் ஏ.ஜே.எம்.முஸம்மில் , மேல் மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளார்.
மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, பாதீட்டு கூட்டத்தொடருக்கு பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பும் இடம்பெறவுள்ளது.