பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (103) 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.00 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார்.

இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Related Articles

Latest Articles