பாம்பு தீண்டி 6 மாத ஆண் குழந்தை பலி! காத்தான்குடியில் சோகம்

ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத வயதை கொண்ட ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவியுள்ளது

பாத்திமா புரத்தில் உள்ள தனது வீட்டில் வெற்றுத்தரையில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாதங்களேயான மேற்படி குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பாம்பு தீண்டி இருக்கிறது. ஆனால் தாயோ காலை 7.00 மணி அளவில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அங்கு குழந்தை இறந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே மேற்படி பாம்பு வீட்டினுள் நுழைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாம்பினை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles