‘பிசிஆர் பரிசோதனை முடிவு வரும்வரை வெளியேற வேண்டாம்’

காய்ச்சல் உட்பட ஏனைய நோய் காரணங்களினால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தற்சமயம் அதிக எண்ணிக்கையிலானோர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு நோய்தொற்றுக்கு உள்ளாகி இறுதி அறிக்கை கிடைக்க முன்னர் தொழிலுக்குச் செல்பவர்களினால் பாரிய பாதிப்பு ஏற்படலாம் என்றும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பல விடங்களிலும் தற்சமயம் எழுமாற்று முறையில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

Related Articles

Latest Articles