பிரதமர் பதவியில் மாற்றம் வருமா?

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவிளலாளர்கள் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும், புதிய பிரதமராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார் எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மேற்படி தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அமைச்சரவை மாற்றம் மற்றும் பிரதமர் பதவியில் மாற்றம் என்பன தொடர்பில் அரசாங்கத்துக்குள் கலந்துரையாடப்படவில்லை. இது திட்டமிட்ட அடிப்படையில் அரசியல் எதிரிகளால் பரப்படும் தகவலாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles