பொருளாதார திட்டங்கள் தொடர்பில் தம்முடன் விவாதம் நடத்துவதற்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.
எஹலியகொட பகுதியில் இன்று (21) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.
” தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் ஆட்சியை தீர்மானிக்கின்றனர். ஆனால், இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில்லை. அதற்கான தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு இல்லை.
எனவே, பொருளாதார திட்டங்கள் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார். முடியுமானால் பிரதமர் இவ்விவாதத்துக்கு வரட்டும் என சவால் விடுக்கின்றேன்.” – என்றும் சஜித் கூறினார்.