இந்திய பிரதமர் மோடியின் தாயார் இன்று காலமானார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயர் காலாமானார்.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்லவிருந்தார்.
இந்த நிலையில் தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைகிறார்.
மேற்கு வங்காளத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.