கொழும்பு மாவட்டம் அவிஸ்ஸாவளை சேர்ந்த எழுத்தாளர் கவிதாயினி பிரதீபா சிவக்குமார் தனது கன்னி கவிதை தொகுப்பினை கடந்த 2022/12/ 23ம் திகதி மாலை 5:30 மணிக்கு இல.43பி கொட்டாஞ்சேனை வீதி கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ருஷா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது .
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரிவிக்கிரமசிங்க மற்றும் இளமை எப் எம் பொறுப்பாளரும் ஊடகவியலாளருமாகிய ஶ்ரீபதி மிருணன் ஆகிய பிரதம அதிதிகளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை தொகுத்தளித்திருந்தார் சக்தி டிவி புகழ் துர்கா வினோதினி அவர்கள்.
சுய பிரார்த்தனையுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையினை சக்தி டிவி தொகுப்பாளினி துர்கா அவர்கள் நிகழ்த்த, நூல் அறிமுக உரையினை எழுத்தாளரும் நூல் விமர்சகரும் அதிபருமாகிய வி எம் ரமேஸ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நூல் பற்றிய மதிப்புரையினை எழுத்தாளரும் கவிஞருமாகிய ப.கனகேஸ்வரன் (கேஜி) மற்றும் இலங்கையின் பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகையும் எழுத்தாளருமாகிய ஜூலியானாவும் வழங்கினர்.
நிகழ்வின் முதலாவது பிரதியினை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காய்த்ரி விக்கிரமசிங்க வழங்கி வைக்க நூலாசிரியர் பிரதீபா சிவக்குமாரின் பெற்றோர் திரு திருமதி சிவக்குமார் தம்பதியினர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டதோடு நிகழ்வில் கவிதாயினி நிரோஜினி ரொபட்டின் கவிதை வாசிப்பும்
பிரதம அதிதி காயத்ரி அவர்களின் உரையும்நூல் பற்றிய வாசகர்களின் கருத்து பகிர்வும் இடம்பெற்றது.இதில் வாசகர் பகிர்வாக ஊடகவியலாளரும் எழுத்தாளருமான நிவேதிதா, சக்தி எப் எம் அறிவிப்பாளர் பிரனீதா, இலங்கை விவாதிகள் கழக உறுப்பினர் லினோஜ் , நண்பர் வாசகர் நிரோஷ் ஆகியோரின் உரை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து தலைமை உரையினை ஊடகவியலாளர் மிருணன் நிகழ்த்த நன்றியுரையினை நூலாசிரியர் பிரதீபா சிவக்குமார் வழங்கினார்.
நிகழ்வு வழமையான நூல் வெளியீட்டில் இருந்து விலகி முற்று முழுவதும் இளைய எழுத்தாளர்கள் வாசகர்கள் என அரங்கை நிறைத்திருந்தமை விஷேட அம்சமாகும் தீராக் காதல் தீரா காமம் என்ற இந்த நூல் இலங்கை எழுத்துலகில் ஒரு பெண் எழுத்தாளரினால் தைரியமாக காமம், காதல் குறித்து பேசப்பட்ட நூல்கள் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பதோடு இந்த நூலில் இருந்து பெண்கள் தைரியமாக தமது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய களம் உருவாகி இருப்பதை அவதானிக்க முடிகிறது.
எழுத்தாளர் பிரதீபா சிவக்குமார் பற்றிய சிறு குறிப்பு…
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளையை பிறப்பிடமாகக் கொண்டவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் இவர் பேராதனை பல்கலைக் கழகத்தில் வணிகத்துறையில் வெளிவாரி பட்டம் பெற்றவர் முகனூலில் இவரது எழுத்துக்கள் முற்போக்கு நிறைந்தவையாகவும் இருந்துள்ளன…
தீராக் காதல் தீராக் காமம் இவரது முதலாவது கவிதை நூல் என்பது குறிப்பிடத் தக்கது
!










