” பிரபாகரனின் மகள் துவாரகா பேசுகின்றார் என்று கடந்த நவம் பர் மாதம் 27ஆம் திகதி வெளியான வீடியோ போலியானது. இந்த வீடியோ புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழுவால் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த
வீடியோவுக்கும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் எந்தவிதத் தொடர்பும் இல்லை.”
– இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
” கடந்த மாதம் மாவீரர் தினமன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலை வர் பிரபாகரனின் புதல்வி துவாரகாவின் உரை என வீடியோ ஒன்று வெளியாகிப்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பில் கருத்துரைக்கும்போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற் கண்டவாறு கூறினார்.
“அந்தப் போலி வீடியோவுக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கும் என்று என்னால் கூற முடியாது. அதேவேளை, தொடர்பு
இல்லை என்றும் என்னால் கூற முடியாது.
ஆனால், இதன் பின்னணியில் புலம் பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர். ” – என்றும் பாதுகாப்பு
அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல்
குணரத்ன மேலும் தெரிவித்தார்.