ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி என்பன இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
கொழும்பு, பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் இது தொடர்பான நிகழ்வு நேற்று (15.03.2024) இடம்பெற்றதாக ஐக்கிய சுதந்திர கட்சி பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் பிரபா கணேசன், கட்சியின் பொது செயலாளர் கங்காதரன் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
அதேபோல ஐக்கிய சுதந்திர கட்சியின் சார்பில் அதன் தலைவர் சோம் கோச் மற்றும் கட்சியின் பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் உள்ளிட்ட தேசிய சபை உறுப்பினர்களும் பங்கேற்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பிரதேசத்தை பிரதானமாக கொண்டு செயற்படும் ஐக்கிய சுதந்திர கட்சி, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து திசை காட்டி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது.
ஆ.ரமேஷ்