பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆராய்வு!

இந்தியாவுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்திய தேசிய பாதுகாப்பு பேரவை செயலக பாதுகாப்பு ஆலோசகரான எயர் மார்ஷல் சந்திப்சிங் (ஓய்வு)ஐ சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள், நவீன தொழில்நுட்பங்களுடன் ஆயுதப்படைகளை நவீனமயமாக்குதல் மற்றும் இரு இராணுவ வீரர்களுக்கும் பயிற்சி வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாக கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

சுமுகமான சந்திப்பின் முடிவில், பாராட்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ , முழு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுமான பிரிகேடியர் பிஎம்எ பாலசூரிய ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles