பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி சார்பில் களமிறங்கிய இலங்கை பின்னணியைக்கொண்ட உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.
பிரிட்டன் ஸ்டார்ட்போர்ட் போ தொகுதியில் போட்டியிட்ட அவர் 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்தொகுதியில் கிறீன்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர் 7 ஆயிரத்து 511 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் உமா குமரனின் பெற்றோர் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.