பிரிட்டன் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது.

1971ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சரிவாக இது உள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு நேற்றுக் காலை சுமார் 4 வீதம் சரிந்தது. பின்னர் அது சற்றே மீண்டது.

தற்போது ஒரு பவுண்ட்டின் மதிப்பு ஓர் அமெரிக்க டாலர் 5 காசாக உள்ளது.

பிரிட்டனின் புதிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் சர்ச்சைக்குரிய சில பொருளாதாரத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

வரலாறு காணாத வரிச் சலுகைகள், பெரிய அளவில் கடன் பெறுவதற்கான திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அது பணவீக்கத்தை மேலும் மோசமாக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

Related Articles

Latest Articles