பல்வேறு காரணங்களுக்காக டிசம்பர் 31 ஆம் திகதி வரை வேறு பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடமாற்ற சபையினால் இடமாற்றம் செய்யப்படும் வரைகுறித்த பாடசாலையே 2023 மார்ச் 24 ஆம் திகதி வரையில் பணிபுரிவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வியாண்டு மார்ச் 24ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
டிசம்பர் 31 வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கடிதம் வழங்கப்பட மாட்டாது.
மேற்படி விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.










