ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை(8) பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன . இந்நிலையிலேயே ஆளுங்கட்சிக்குள்ளேயே அமைச்சரவையை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.