ஹம்பாந்தோட்டையில் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பெற்றோலிய மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.