புதிய சம்பள கட்டமைப்பு தேவையை கவனத்தில் கொண்டு அதற்காக புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு
அல்லது புதிய சம்பள கட்டமைப்பு தேவை குறித்து புதிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் புதிய தலைவர், இலங்கை பெருந்தோட்ட சங்கத்தின் 166ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் தெரிவிப்பு
அனைத்து தோட்டப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையான சம்பள உயர்வு திருத்தம் குறித்து மட்டுமன்றி அரசினால் முள் தேங்காய் செய்கை தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடைகள் குறித்தும் எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சங்கத்திற்கு (PAC) மிகுந்த சவால்கள் நிறைந்த மற்றும் தீர்மானம் மிக்க எதிர்காலத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பெருந்தோட்ட சங்கத்தின் 166ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றுகையில் அதன் புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது உரையாற்றிய தலைவர் புலுமுல்ல, இந்த தீர்மானம் மிக்க பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மற்றும் எதிர்கால பெருந்தோட்டத் துறை குறித்து புதிய கண்ணோட்டத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை பெருந்தோட்ட சங்கம் தற்போது புதிய அரசு மற்றும் அந்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களுடனும் மிகவும் நெருக்கமாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மிக முக்கியமாக பாரிய பிரச்சினைகளை மேலும் காலம் தாழ்த்தாமல் தீர்க்க வேண்டுமெனவும், அனைத்து தரப்பினரும் தமது பேதங்களை மறந்து பெருந்துதோட்டத் துறையின் மேம்பாட்டிற்காக ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்வாறான பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில் 150 வருட பழைமை வாய்ந்த இந்த நன்மதிப்பு பெற்ற துறையின் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையானது நிலையான சம்பள வியூகத்தை நடைமுறைப்படுத்துவதாகும் என தெரிவித்தார்.
“எமது கண்ணோட்டமானது தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மையான மாற்று சம்பளத் திட்டம் குறித்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் பின்னர் எதிர்கால சந்ததியினருக்காக எமது துறையில் தொடர்ச்சியாக கொண்டு நடத்திச் செல்வதாகும். தோட்டத்திலிருந்து நகர்புரங்களுக்கு இளைஞர் யுவதிகள் இடம்பெயர்கின்றமை தொழிலாளர்களின் துரிதமான பற்றாக்குறைக்கு காரணமாக இருப்பதுடன் இந்த சிக்களைத் தீர்ப்பது மற்றும் எமது துறையை மேம்படுத்துவதற்காக மாற்று முறையில் சிந்திக்க வேண்டியுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நீண்டகால தடைகளிலிருந்து மீண்டு உச்ச அளவில் சிறந்த நன்மையை பெற்றுக் கொள்வதற்காக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தேயிலை வளர்ப்பு வர்த்தக ரீதியாக மேற்கொள்வதற்கு 13 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1854ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் ஒன்றரை நூற்றாண்டு முழுவதும் இலங்கையின் பெருந்தோட்டத் துறை மட்டுமன்றி தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 பிரதேசத்திலுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட 180க்கும் அதிகமான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் சங்கமானது இலங்கையில் தேயிலை, றப்பர், ஃபாம் எண்ணெய் மற்றும் தெங்கு போன்ற தோட்ட போகங்களில் 40%க்கும் அதிகமான அளவில் அதனுடன் தொடர்புடைய 332 தொழிற்சாலைகளை நிர்வகித்து வருகின்றது. அத்துடன் இதன் கீழ் நேரடியாக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய மறைமுக வேலை வாய்ப்புக்கள் மூலம் ஒட்டுமொத்தமாக பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை திட்டமிடுவதற்கு தோட்டத் தொழிலளர் சங்கத்தால் முடிந்துள்ளது.
அதன் இணை நிறுவனங்களை கவனிக்கும் இடத்து மாவட்ட பெருந்தோட்ட சங்கமானது விசேட பங்கொன்றை ஆற்றியுள்ளது. விசேடமாக தோட்ட நிறைவேற்று தனிநபர் மேம்பாடு குறித்து உள்நாட்டு அதிதிகளை அழைத்து தொடர்ந்து நடத்தப்படும் வேலைத் திட்டங்கள் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆரம்பத்திலிருந்தே இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் நாட்டில் பெருந்தோட்டத் துறைக்காக பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 1857இல் அமைக்கப்பட்ட மலையக ரயில் பாதை வேலைத் திட்டத்தின் நான்கில் ஒரு பங்குகிற்கான செலவினை மேற்கொள்ளல், 1894இல் முதலாவது தேயிலை மேம்பாட்டு வேலைத் திட்டத்தை மேற்கொண்டதை போன்றே 1925இல் தேயிலை பரிசோதனை நிறுவனத்தை அமைப்பதற்காக பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியமை பிரதானமாக கருதப்படுகிறது. அத்துடன் தற்போதைய சவால்கள் தொடர்பில் இலங்கையின் பெருந்தோட்ட சங்கம் தீர்க்கமான பங்கினை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் பெருந்தோட்ட சங்கத்தின் தோட்ட முகாமைத்துவ கமிட்டி 21 பிரதேச தோட்ட கமிட்டிகளில் பிரதம நிறைவேற்று அதிகாரிகளைக் கொண்டுள்ளது. பெருந்தோட்ட துறையில் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை ஆராய்வதற்காக இந்த குழு எப்பொழுதும் ஒன்று கூடுவதுடன், சம்பளம், உற்பத்தி திறன், பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் ஏனைய தொடர்புபட்ட விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட இலங்கையின் பெருந்தோட்ட துறையின் தொடர்ச்சியான சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்லக் கூடிய கொள்கைகளுக்கு இசைவாக முன் நிற்கும். அத்துடன் பல்வேறு கொள்கைகளின் கீழ் தொழிலுக்கும் மற்றும் அதில் தொடர்புடையவர்களுக்கும் ஏற்படும் அளுத்தங்கள் குறித்தும் வெளிப்படுத்துவதற்காக இந்த கமிட்டியினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.