புதிய நாடகத்தை அரங்கேற்கும் மஹிந்த – விளாசித் தள்ளுகிறார் சஜித்

” நாட்டின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, பொருளாதாரம் வங்குரோத்தாகியுள்ள இந்நேரத்தில், சில தரப்பினர் ஏமாற்று அரசியல் நாடகங்களை அரங்கேற்றிவருகின்றனர்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்திற்கும், VAT வரியை அதிகரிப்பதற்கும் ஆதரவாக வாக்களித்து விட்டு, ஜனாதிபதியை பாதுகாத்துக் கொண்டும், வரிச் சுமையை மக்களின் தோள்களில் சுமத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச அறிக்கைகளை வெளியிடுது பெரும் நகைச்சுவையான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

” VAT வரியை அதிகரிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்ப ஆட்சியின் ஒரு தரப்பினர் அதற்கு வாக்களிக்காமல், மக்கள் பக்கம் நிற்பதாக பாசாங்கு செய்தனர்.

நாட்டையே வங்குரோத்தாக்கி, நாசமாக்கிய இவர்கள், ஏமாற்றுத் தனமான செயற்பாடுகள் மூலம் மக்கள் அவதானங்களை திசை திருப்ப மீண்டும் முயற்சித்து வருகின்றனர் ,இவர்களின் இந்த போலியான செயற்பாடுகளை கண்டு ஏமாறக்கூடாது எனவும் சஜித் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles