புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதன்போதே மேற்படி சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.










