புதிய பொதுச்செயலாளர் யார்? 23 இல் கூடுகிறது திகா அணி!

தொழிலாளர் தேசிய முன்னணியிக்கு புதிய பொதுச்செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டனில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக சபை மற்றும் உத்தியோகத்தர் சபை ஆகியன அன்றைய தினம்கூடி முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் கிளையாகவே முன்னணி செயற்பட்டுவருகின்றது.

அத்துடன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்க மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயப்படவுள்ளது.

Related Articles

Latest Articles