புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்தார், எனினும், அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.
அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேசபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிடம் வினவிய போது, புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அவருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறினார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபர் ஆவார். அவர் நவம்பர் 27, 2020 அன்று அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.