புதிய பொலிஸ்மா அதிபர் குறித்து அடுத்த வாரம் இறுதி தீர்மானம்

புதிய பொலிஸ்மா அதிபர் யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளையும் இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அரச தலைவர்களின் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அங்கும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

Related Articles

Latest Articles