புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச அண்மையில் நியமிக்கப்பட்டார்.

பதவியேற்ற பின்னர், புதிய விமானப்படைத் தளபதி சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்ததுடன் நினைவுப் பரிசையும் கையளித்தார்.

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
06-07-2023

Related Articles

Latest Articles