புதுக்குடியிருப்பு விபத்தில் 28 வயது இளைஞன் பலி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

உழவு இயந்திரமும் சிறியரக பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் .

பட்டா வாகனத்தில் பயணித்த குறித்த இளைஞன் விபத்தில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன .
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles