புதையல் தோண்டும் இயந்திரத்துடன் வவுனியாவில் இளைஞன் கைது

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புதையல் தோண்ட பயன்படும் ஸ்கானர் இயந்திரத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (28) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படும் ஸ்கானர் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த இயந்திரம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதனை எடுத்துச் சென்ற 35 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

 

Related Articles

Latest Articles