அடுத்தாண்டு முற்பகுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி எவ்வாறு போட்டியிடும் என அதன் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு,
நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்.
ஒவ்வொரு மாவட்டங்களின் களநிலைமைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து, தனித்தோ, ஐக்கிய மக்கள் சக்தியில் கூட்டணியாகவோ அல்லது வேறு நட்பு கட்சிகளுடன் கூட்டாகவோ தமுகூ களமிறங்கும்.