தமிழ் சிங்களப் புத்தாண்டுக்காக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அரச செலவினத்தை அதிகபட்சமாக குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச செலவினத்தில் 5,300 கோடி ரூபாகுறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செலவினங்களும் இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சர்வ கட்சி மாநாட்டில் புதிய வரவு செலவுத் திட்டம் குறித்து பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.