புனித யோசேவாஸ் அடிகளாரின் பெயர் கொண்ட திருத்தல திறப்பு விழா

புனித யோசேவாஸ் அடிகளாரின் பெயர் கொண்ட திருத்தல திறப்பு விழாவானது கடந்த 25/04/2021 ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு போற்றி புனித பிரான்ஸ் சவேரியார் ஆலய வளாகத்தில் கண்டி மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி ஜோசப் வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆயரின் பங்குபற்றுதலுடன் பட்டல்கல பங்கு தந்தை அருட்தந்தை எட்வின் ரொட்றிகோ அடிகளார்,அருட் தந்தை சேவியர் குரூஸ் அடிகளார், அருட்தந்தை. அடிகளார் என்பவர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக திருவாளர் விக்டர் சில்வா கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் அருட்சகோதரிகள்,நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர்,நோர்வுட் பொலிஸ் நிலைய அதிகாரி, போற்றி தோட்ட முகாமையாளர், மற்றும் விஷேட விருந்தினர்கள் , போற்றி ,நோர்வுட், கிளங்கன் , அயரபி, நிவ்வெளி பிரதேச பொதுமக்கள் உள்ளிட்ட பட்டல்கல பங்கு கத்தோலிக்க விசுவாசிகள் மற்றும் ஏனைய பங்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு புனித யோசேவாஸ் அடிகளாரின் அருளாசீரை பெற்று க்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles