அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்க நிலை காரணமாக இலங்கையில் அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் லுனுகல பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பல வீடுகள் முற்றாக சேதமடைந்திருந்தன.
குறித்த வீடுகளை சீர்த்திருத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக அரசாங்கத்தினால் 10000 ரூபாய் காசோலை வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.










