தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யும் நோக்கம் தற்போது கிடையாது – என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எனினும், குறித்த பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதற்குரிய வேலைத்திட்டம் உருவாக்கப்படும் எனவும், 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அவை அமுல்படுத்தப்படும் எனவும் பிரதமர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.