புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்தவாரம் வெளியீடு

2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

2888 பரீட்சை மத்திய நிலையங்களில் இவர்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டிருந்தன.

Related Articles

Latest Articles