பெண்களை ஒன்லைனில் விற்ற மற்றுமொரு நபரும் கைது!

இணையம் வழியாக பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தினார் எனக் கூறப்படும் நபரொருவர் இரத்தினபுரி, கலவானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரும் இணையத்தளமொன்றை நடத்திவந்துள்ளார்.

கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயது சிறுமியொருவரை இணைய வழியாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு இணைய வழியாக ஈடுபடுத்திய மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles