கிளிநொச்சி திருவையாறு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
” வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டிலிருந்த பெண்ணிடம் விலாசம் ஒன்றை காண்பித்து விசாரித்துள்ளார்.
பின்னர் வீட்டிலிருந்து வெளியேறுவதுபோல் சென்றுவிட்டு பின்னர் திரும்பி ஓடிவந்து பெண் அணிந்திருந்த 2 பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.
இதன்போது பெண் சங்கிலியை அறுக்க விடாது தடுத்த போது பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
