பெருந்தொகை கஞ்சாவுடன் பொலிஸ் SSP கைது!

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 650 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகப்பூர்வ வதிவிடம் நேற்றிரவு விசேட அதிரடிப் படையினர் சோதனைகளை நடத்தினர்.

இதன்போது, 650 கஞ்சா செடிகள் மற்றும் நவீன உலோக ஸ்கேனர் இயந்திரம் என்பன மீட்கப்பட்டன.

சந்தேகநபரை மொனராகலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரியின் வீட்டில் வேலைசெய்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles