2022 க.பொ.சா தர பெறுபேறுகளில் கடந்த வருடங்களை விட கல்வி மட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளதையிட்டு தான் பெருமிதம் கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் மும்மொழி பாடசாலைகளிலும் மாணவர்களின் கற்றல் ஆற்றலை காண்கிறேன். அதே நேரம் மலையக பாடசாலைகளின் பெறுபேறுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கல்வியில் முழுமைத்துவமம் பெற்ற ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்ற எனது கனவு நிச்சயமாக பயன் தரும் என்ற நம்பிக்கையில் இன்னும் ஒரு வெற்றியை காண்கிறேன்.
2022 ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றுவித்த எல்லா மாணவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.