பெருந்தோட்ட மக்களுக்கு ஆறுதல் தரும் பாதீடு!

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டமானது மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான வேலு யோகராஜ் தெரிவித்தார்.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மலையகம் தொடர்பிலும், பெருந்தோட்ட பகுதிகள் சம்பந்தமாகவும் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுலாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

” கல்வி புரட்சிமூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அந்தவகையில் மத்திய மாகாணம் கல்வி வலயம் ஆவதற்குரிய வழிவகைகள் பாதீட்டில் உள்ளன. இது எமது மக்களுக்கு பயன்தரக்கூடிய விடயமாகும்.

அத்துடன், காணி உரிமை பெறுவதும் எமது பிரதான இலக்காக இருக்கின்றது. அதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கும் பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்துகொண்டு எமது சமூகத்துக்காக சிறந்த தலைமைத்துவத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கிவருகின்றார். அவரால்தான் எமது சமூகத்துக்கான குரல் அமைச்சரவைவரை ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ” எனவும் வேலு யோகராஜ் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles