திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு லொறியொன்றில் டீசல் மற்றும் பெற்றோலை கொண்டு செல்லும்போது ரொட்டவெவ பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து லொறியுடன் மூன்று சந்தேக நபர்களை நேற்று (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி- இரத்தினபுர- கொழும்பு பகுதியைச் சேர்ந்த நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
