இரத்தினபுரி, நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த காணி பிரச்சினை சம்மந்தமாக விஷேட கலந்துரையாடலொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தலைமையில் நடைபெற்றது.
கொழம்பகம தமிழ் வித்தியாலயத்துக்குரிய காணியில் வெளியார் அத்துமீறி நுழைந்து காணியை அபகரிக்க முயல்வது தொடர்பிலான சர்ச்சையை உடன் முடிவுக்கு கொண்டுவந்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டுமாறு இரத்தினபுரி நிவிதிகல பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி பாலித்தவுக்கு மனோ கணேசன் அறிவுறுத்தினார்.
அத்துடன், நிவிதிகல கல்வி வலய பணிப்பாளர் திருமதி ரூபசிங்கவிடம் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். பாடசாலை காணி சம்மந்தமான வழக்கை நடத்தி பாடசாலைக்கு சார்பாக தீர்ப்பை பெற்றுத் தருமாறு வழக்கறிஞர் திலினியிடம் உரையாடினார்.
காணியை பாடசாலையின் பாவனை மற்றும் பயன்பாட்டில் இருந்து எக்காரணம் கொண்டும் விலக வேண்டாம் என்று பாடசாலை தரப்பினரிடம் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.