பெலியத்த படுகொலை – ‘ஸகெட்ச்’ போட்ட பிரதான சந்தேகநபர் கைது!

பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் வைத்தே 54 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேக நபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபரே ஜீப் வண்டியின் சாரதியாக செயற்பட்டுள்ளார் எனவும், மேற்படி தாக்குதலை உள்நாட்டில் இருந்து அவரே திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் உட்பட ஐவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காகவும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles