“பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் போதைப்பொருள்”

பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனொன்றில் இருந்து ஒரு கோடியே 64 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் முனையமொன்றில் வைத்து இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் – வென்னப்புவ பகுதியிலுள்ள முகவரியொன்றுக்கு அனுப்பப்பட்டிருந்த குறித்த பொதியில் 01 கிலோ 98 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி போலியானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலீ அருக்கொட குறிப்பிட்டார்.

குறித்த ஹஷிஸ் போதைப்பொருள், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

Latest Articles